அறிக
பதிவு செய்க
சத்குரு
Login

ஆன்லைன்
வகுப்புகள்

யோகா மற்றும் தியானம்நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்சமையல் குறிப்புகள்

நீங்கள் கடினமான காலங்களை உள்நிலை கருணையுடன் கடந்து செல்ல முடிந்தால், நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு வாய்ப்பாக இருக்கும்
- சத்குரு

ஒரு உலகளாவிய நோய்த்தொற்று இருக்கும் போது
உள்நிலையில் சமநிலையை பராமரிக்கவும்

நாம் அசாதாரணமான மற்றும் அமைதியற்ற காலங்களில் வாழ்கிறோம் புதிய கொரோனா வைரஸ் (COVID-19) அமெரிக்காவில் இன்னும் புதிய பல வடிவம் பெற்று வருவதால், நாம் அனைவரும் நம் அன்றாட வாழ்க்கையில் வியத்தகு மாற்றங்களை அனுபவித்து வருகிறோம். கடுமையான நெருக்கடியான இந்த நேரத்தில், பதட்டம் மற்றும் மன அழுத்தம் உங்களை எளிதில் மூழ்கடிக்க கூடும். உங்களுக்குள் அமைதி, உள்நிலையில் சமநிலை மற்றும் நல்வாழ்வைக் காப்பது இப்போது மிக முக்கியமானது.

உங்கள் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் நல்வாழ்விற்கு உதவும் வகையிலான யோக ஆரோக்கிய வழிமுறைகளுடன்,ஆன்லைனில் அணுகக்கூடிய பல சக்திவாய்ந்த யோகா மற்றும் தியான பயிற்சிகளை ஈஷா அறக்கட்டளை வழங்குகிறது

சத்குருவிடம் இருந்து தினசரி பயிற்சி

கீழேயுள்ள தினசரி பயிற்சிகள் சத்குரு அவர்களால் அனைவருக்கும் ஒரு உறுதுணையானக் கருவியாக வழங்கப்பட்டுள்ளன, எனவே இந்த சறுக்கலான கட்டத்தினை உடல் மற்றும் மனரீதியாக குறைந்தபட்ச உராய்வுகளுடன் நாம் எடுத்து செல்ல முடியும்:

  • சிம்ஹா க்ரியா, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நுரையீரல் திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு எளிய யோகப்பயிற்சி
  • 12 முறை யோகா யோகா யோகேஸ்வராய உச்சாடணத்தை தொடர்ந்து ஈஷா க்ரியா

கீழேயுள்ள வழிகள் மூலம் இந்த பயிற்சிகளை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அதைத் தொடர்ந்து, நீங்களாகவே அல்லது வீடியோக்களின் வழிகாட்டுதலுடன் பயிற்சி செய்யலாம்.

கூடுதல் உதவி

உள்நிலை மாற்றத்திற்கான யோக கருவிகள், உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுத் தொடர்பான உதவிக் குறிப்புகளை வெபினார்கள், செய்திமடல்கள் மற்றும் பலவற்றின் மூலம் கூடுதல் உதவிப் பெற விரும்பினால் கீழே பதிவு செய்க.

Register Now

வழிகாட்டுதலுடன் கூடிய இலவச தியானம்

ஈஷா க்ரியா

ஈஷா க்ரியா என்பது சத்குரு அவர்களால் உருவாக்கப்பட்ட எளிமையான அதே சமயம் சக்திவாய்ந்த தியானம் ஆகும் "ஈஷா " என்றால் படைப்புக்கு அடிப்படையானது எதுவோ அது "க்ரியா" என்றால் உள் நோக்கிச் செய்யும் செயல்

ஹார்வேர்டு மெடிக்கல் ஸ்கூல் நடத்திய ஒரு ஆராய்ச்சியில், பதற்றம், கோபம், அயர்ச்சி, குழப்பம் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றை இந்த தியானம் இலகுவாக்க வல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது

ஆராய்ச்சி முடிவுகள்>

கால அளவு : 12-18 நிமிடங்கள்
வெபினார் மூலமாகவும் வழங்கப்படுகின்றது

வெபினாருக்குப் பதிவு செய்ய
தியானம் செய்ய

சக்தி உருவாக்குதல்

ஒருவர் தன் வாழ்க்கையில் என்ன தேவையோ அதை மனத்தின் சக்தியின் மூலம் உருவாக்குவது சிட் சக்தி எனப்படும் நான்கு வகையான வழிகாட்டுதலுடன் கூடிய சிட் சக்தி தியானங்கள் நம் வாழ்வில் அன்பு, ஆரோக்கியம், அமைதி மற்றும் வெற்றியின் வெளிப்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

கால அளவு : 20 நிமிடங்கள்

இன்ஃபினிடி தியானம்

வழிகாட்டுதலுடன் கூடிய இன்ஃபினிடி தியானம், ஒருவரது சக்தி நிலையில் சமநிலை ஏற்படுத்த சத்குரு அவர்களால் உருவாக்கப்பட்டது இது ஒருவர் எல்லையில்லா தன்மையை அனுபவபூர்வமாக உணரக்கூடிய வாய்ப்பினை சாத்தியமாக்குகிறது

கால அளவு : 30 நிமிடங்கள் (குறிப்புகளுடன்)
20 நிமிடங்கள் (தியானம்)

இலவச யோக பயிற்சிகள்

சத்குரு app துணையுடன் உடல் மற்றும் மனம் துரிதமாக ஆனந்தம் அடையவும் உடனடி பயன்பெறவும் இலவசமாக பதிவிறக்கம் செய்யவும் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையைக் கொண்டு சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த 5 - நிமிட பயிற்சிகள், தினமும் தவறாமல் கடைபிடிப்பதால் வாழ்வில் மாற்றத்தை உருவாக்க முடியும்!

Inner Engineering Online

" வெளி சூழலில் நல்வாழ்வை உருவாக்குவதற்கு அறிவியலும் தொழில்நுட்பமும் இருப்பதைப் போலவே உள்நிலையிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்கான முழுமையான அறிவியலும் தொழில்நுட்பமும் உள்ளது."
- சத்குரு

ஈஷா யோகா என்பது யோக விஞ்ஞானத்திலிருந்து பெறப்பட்ட நல்வாழ்விற்கான தொழில்நுட்பமாகும் உங்கள் அதிகபட்ச சாத்தியத்தை நீங்கள் கண்டுணரத் தயாராக வேண்டும் என்பதுதான் இவ்வகுப்பின் நோக்கம். இதற்காக பாரம்பரிய யோக செயல்முறையின் சாரத்திலிருந்து தன்னிலை மாற்றத்திற்கான சக்தி வாய்ந்த செயல்முறைகள், வாழ்வின் முக்கிய அம்சங்களை அணுகுவதற்கான தியானங்கள் மற்றும் பண்டைய ஞானத்தின் ரகசியங்களை அறியும் வாய்ப்பும் இதில் உள்ளன.

உங்களுடைய இடத்திலேயே, உங்களுக்கு ஏற்ற நேரத்தில் சத்குருவுடன் ஆன்லைனில் ஈஷா யோகாவை உணருங்கள் ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சி ஏழு 90-நிமிட அமர்வுகளில் பாரம்பரிய யோகா செயல்முறைகள் மூலம் நம் வாழ்வை அனுபவபூர்வமாக வாழவும், வழிநடத்தவும், வாழ்க்கையை உணரவும் சாத்தியமாக்கும் கருவிகளைக் கொண்டது.

உங்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பரிபூரணமான வழிமுறைகள்:

யோக விஞ்ஞானம், உங்கள் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, முழுமையான உடல் நலம் மற்றும் நலவாழ்விற்கு இயற்கையாகவேத் தீர்வுத் காணவல்ல நுண்ணறிவை வழ்ங்குகிறது.

வேப்பிலை

வேப்ப மரத்திலிருந்து இயற்கையாக கிடைக்கும் ஒரு மூலிகை வேப்பிலை. வேப்பிலையை உட்கொள்வது செரிமானம், சுவாசம், இரத்த ஓட்டம், சிறுநீரக் குழாய் மற்றும் இனப்பெருக்க மண்டலத்திற்குப் பயனுள்ளதாகும். பொதுவாக கூறவேண்டுமென்றால், இயற்கையான முறையில் உடலை சுத்திகரிக்கவும், ஆரோக்கியமான திசுக்களை சீரமைக்கவும், வேப்பிலை உறுதுணையாக நிற்கும் தொடர்ந்து வேப்பிலை உட்கொள்வது கீழே குறிப்பிட்டுள்ள பலன்களை அளிக்கும் என்று பல மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன:

  • ஆரோக்கியமான ஜீரண மண்டலத்தை பராமரிக்க உதவும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கல்லீரல் செயல்திறனை பலப்படுத்தும்
  • நல்லதொரு வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவும்.
  • ஆரோக்கியமான சுவாச மண்டலத்தை பராமரிக்க உதவும்.
  • பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவற்றை அழித்து ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது
  • இரத்தத்தின் சர்க்கரை அளவு, இரத்த சுத்திகரிப்பு மற்றும் நச்சுத்தன்மை அகற்றுவதற்கு உதவும்

மஞ்சள்

மஞ்சள் செடியிலிருந்து வரும் கிழங்கு. இது ஆசிய உணவில் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் உங்கள் உணவில் முக்கியமானதொருப் பொருள் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். மருந்து தயாரிப்பதற்கும் மஞ்சள் வெகுவாக பயன்படுத்தப்படுகிறது.

Benefits:
  • உடலின் மந்த நிலையை குறைக்கிறது
  • ஆரோக்கியமான மூட்டுகளுக்கு வழிவகுக்கிறது
  • இரத்தம், உடல் மற்றும் சக்தியை தூய்மைப்படுத்த உதவுகிறது.
  • சுவாச மண்டல செயல்பாட்டிற்க்கு உறுதுணையாக இருக்கும்
  • புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்

தாமிரம்

தாமிரபாத்திரங்களில் சேமிக்கப்படும் நீர், உடலின் கழிவுகளை அகற்றுவதில் ஒரு முக்கிய பங்கு ஆற்றுகிறது.

நீருக்கு ஞாபக சக்தி இருக்கின்ற காரணத்தினால், நீரை எவ்வாறு சேமிப்பது என்பதில் நாம் மிகுந்த அக்கறை காட்டியுள்ளோம். தண்ணீரை தாமிர பாத்திரத்தில், இரவு முழுவதும் அல்லது குறைந்தபட்சம் நான்கு மணி நேரம் சேமித்து வைப்பதால் அது தாமிரத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தன்மையை கிரகித்துக்கொள்ளும். இது குறிப்பாக உங்கள் கல்லீரல்,உங்கள் ஆரோக்கியம் மற்றும் சக்தி நிலை ஆகியவற்றிற்கு பொதுவாகவே நன்மை தரக் கூடிய ஒன்று.சத்குரு

தாமிரம் நுண்ணுயிர் கொல்லி ஆகும் அது பாக்டீரியா மற்றும் வைரசை சில நிமிடங்களில் கொல்லும் ஆய்வு அறிக்கைகள்

மூலிகை ஜாம்

ஆயுர்வேத மூலிகை ஜாம் என்பது 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆக்ஸிஜனேற்றி மற்றும் வயது எதிர்ப்பு சூத்திரம். சம்பிரதாயத்தில் நீண்ட ஆயுள் தரும் அமுதமாக பயன்படுத்தப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியுடன் சக்தியை பலப்படுத்தும் தன்மையை கொண்ட இது உடலில் நச்சுத்தன்மையை அகற்றி, ஆரோக்கியமான ஜீரண செயல்பாடு, ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவை சீரமைக்கும் ஒரு வலிமையான ஆற்றல் படைத்தது இந்த சுவையான கலவை இமய மலையிலிருந்து இயற்கை முறையில் விளைந்த நெல்லிக்கனி, இயற்கையான மூலிகைகள் மற்றும் நறுமணப்பொருட்களால் ஆனது இந்த ஆயூர்வேத மூலிகை ஜாம், இளமை,வீரியம் மற்றும் உயிர்த்தன்மையை ஊக்குவிக்கும்

எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் உணவு வகைகள்

எளிமையான சுவையான உணவு

கீரை கலவை (கீரை, பயறு மற்றும் அரிசி கஞ்சி)

இது தட்ப வெப்பம் மற்றும் உடல்நலக்குறைவு உங்களை ஆட்கொள்ளும் சமயத்திற்கான சிறந்த சிற்றுண்டியாகும். இது சுகத்திற்கு மட்டுமின்றி நம் எதிப்பு சக்தியை ஊக்குவிக்கும் வைட்டமின், இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் சத்து கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

உட்கொள்ளும் முறை: 3-4

மூலப்பொருட்கள்:

  • அரிசி- 1 கப்
  • பாசிப்பருப்பு- 1/2 கப்
  • உப்பு- 1.5 தேக்கரண்டி
  • தண்ணீர்- 4 கப்
  • இளங்கீரை- 1/2 கிலோ
  • இஞ்சி- 1/2 அங்குலம்
  • நெய் - 3 தேக்கரண்டி மற்றும் பரிமாறுவதற்கு தேவையான அளவு
  • சீரகம்- 1 தேக்கரண்டி
  • மிளகு- 1 தேக்கரண்டி

குறிப்புகள்:

  1. அரிசி மற்றும் பயறை நீரில் கழுவி வடிகட்டவும். தண்ணீரில் அரிசி, பயறு மற்றும் உப்பு கலந்து 6 நிமிடங்களுக்கு பிரஷ்ஷர் குக்கரில் வேக வைக்கவும், பிறகு அழுத்தம் தானாக வெளியேற 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.
  2. ஒரு பெரிய பானையில் 8-10 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சுத்தப்படுத்திய இளங்கீரையை அதில் சேர்த்து நன்றாக சுருங்கும் வரை 1-2 நிமிடங்கள் வேக வைக்கவும். பிறகு தண்ணீரை முழுமையாக வடிகட்டி,
  3. கீரையில் இஞ்சி மற்றும் மிளகு சேர்த்து ஒரு மிருதுவான கூழ் மாதிரி ஆகும் வரை கடையவும்
  4. நெய்யை சூடாக்கி அதில் சீரகத்தை தாளிக்கவும். கீரை கூழில் உப்பு சேர்த்து அதை வேக வைத்த அரிசி மற்றும் பயறில் ஒன்றாக கலந்திடவும். ருசிக்கு நெய் மற்றும் மிளகுப்பொடியைத் தேவையான அளவு சேர்த்து சூடாகப் பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு, பரட்டை கீரை மற்றும் இஞ்சி

உட்கொள்ளும் முறை: 2

மூலப்பொருட்கள்:

  • 3/4 அங்குல இஞ்சி (புதியது)
  • 1/2 பவுண்டு பரட்டை கீரை
  • 2 சிட்டிகை உப்பு
  • 1 தேக்கரண்டி நெய் அல்லது தேங்காய் எண்ணெய்
  • 2 கப் சர்க்கரைவள்ளி கிழங்கு

குறிப்புகள்:

  1. பரட்டை கீரையை துடிப்பான பச்சை நிறம் திரியும் வரை கொதிக்க வைக்கவும்.
  2. வேறொரு பானையில் கிழங்கு துண்டுகளை போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றவும் உப்பு சேர்த்து அது மென்மையாகும் வரை கொதிக்க வைக்கவும் இனிப்பு நீரை சூட்டியிருந்து அகற்றி மற்றுமொரு ஆகாரத்திற்கு சேமிக்கவும்
  3. இஞ்சித் துருவலை நெய்யில் இட்டு 30 விநாடிகள் வணக்கவும் (Check) பிறகு வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கையும் பரட்டை கீரையையும் சேர்த்து போதுமான அளவு உப்பு போடவும் மென்மையான கிழங்கு உடையா வண்ணம் மென்மையாக கலக்கவும்

பயறு நெல்லிக்காய் சூப்

உட்கொள்ளும் முறை: 4-5

மூலப்பொருட்கள்:

  • மைசூர் பருப்பு- 1/2 கப்
  • பாசிப்பயறு-1/2 கப்
  • கிராம்பு- 2
  • மிளகு- 2-3
  • நறுக்கிய கீரை - 1/2 கப்
  • நறுக்கிய காரட்- 1/2 கப்
  • இஞ்சி- 1 அங்குலம்
  • தக்காளி- 2 (நறுக்கி வைக்கவும்)
  • நெல்லிக்காய்- 2 (சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்)

குறிப்புகள்:

  1. ஒரு பானையில் நெல்லிக்காய் உட்பட எல்லா காய்கறிகளையும் 4-5 கப் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்தப் பிறகு 15 நிமிடங்களுக்கு தீயை குறைத்து காய்கற்களை வேக விடவும். அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு குளிர்வித்து கூழாக்கவும்
  2. பிரஷ்ஷர் குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி மைசூர் பருப்பு மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை பிரஷ்ஷர் குக்கரில் சமைத்து, குக்கரை தானாக குளிர விடவும். குக்கரை திறந்து மென்மையான கூழ் தயாரிக்கவும்.
  3. ஒரு பெரிய வாணலியில் நெய்யை மிதம் அல்லது குறைந்த அளவில் சூடு பண்ணவும். சூடானதும், மிளகு மற்றும் கிராம்பு சேர்த்து வெடிக்க விடவும் இப்போது, இஞ்சி பேஸ்ட் சேர்க்கவும் பச்சை வாசனை போன பின், காய்கறிகளின் வடிசாறு மற்றும் பருப்பை அதில் சேர்க்கவும்.
  4. சூப்-பின் பதம் அளவிற்கு வரும் வரை தண்ணீர் சேர்த்து, 5 நிமிடங்களுக்கு மென்மையாக "சிம்" -ல் கொதிக்க விடவும்.
  5. அலங்கரிக்க கொத்தமல்லி சேர்க்கவும்.

ஊட்டச்சத்துமிக்க மிருதுவாக்கிகள்

வைட்டமின் அதிகப்படுத்தும் ஸ்மூதி

உட்கொள்ளும் முறை: 2

மூலப்பொருட்கள்:

  • 1 ஆரஞ்ச் - தோலுரித்து, சுமாராக நறுக்கியது
  • 1 பெரிய கேரெட் - தோலுரித்து, சுமாராக நறுக்கியது
  • 2 தண்டு செலெரி /சிவரிக்கீரை - சுமாராக நறுக்கியது
  • 50 கிராம் மாங்காய் - சுமாராக நறுக்கியது
  • 200 மில்லி தண்ணீர்

குறிப்புகள்:

  1. எல்லா கூட்டுப் பொருள்களையும் (ஆரஞ்ச், கேரட், செலெரி /சிவரிக்கீரை) ப்ளெண்டரில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மிருதுவாகும் வரை கலக்கவும்)

கேரட்-இஞ்சி ஸ்மூதி

உட்கொள்ளும் முறை: free-ym:recipes:carrotGingerSmoothie:servings

மூலப்பொருட்கள்:

  • 1 பெரிய பச்சை வாழைப்பழம்
  • 1 கப் புதிதான அண்ணாசிப் பழம்
  • 1/2 டீ-ஸ்பூன்/தேக்கரண்டி புதிதான இஞ்சி
  • 1/4 கப் அரைத்த மஞ்சள் (அதற்கு மாற்று இலவங்கப் பட்டை)
  • 1/2 கப் கேரட் சாறு
  • 1 டீ-ஸ்பூன்/தேக்கரண்டி எலுமிச்சை சாறு (பாதி எலுமிச்சை ஒரு 1 டீ-ஸ்பூன்/தேக்கரண்டி அல்லது 15 மில்லி சாறு தரும்)
  • 1 கப் இனிப்பு இல்லாத தேங்காய்ப் பால்

குறிப்புகள்:

  1. ஒரு ப்ளெண்டரில், ஸ்மூதி -க்கான கூடுப் பொருட்களை ஒன்று சேர்த்து, பாலாடை (க்ரீம்) போலவும், மிருதுவாகவும் ஆகும் வரை ப்ளெண்ட் செய்யவும். சரியான கலவை ஆகவில்லை எனில், கூடுதலாக கேரட் சாறு அல்லது தேங்காய்ப் பால் சேர்க்கவும். தேவைக்கேற்ப பக்கங்களை சுரண்டலாம்
  2. சுவைத்துப் பார்த்து பக்குவபடுத்தவும் - இனிப்பிற்கு வாழைப்பழம் அல்லது அண்ணாசிப் பழம், அசிடிட்டி-க்கு எலுமிச்சை, காரத்திற்கு இஞ்சி, (உஷ்ணத்திற்கு/வெப்பத்திற்கு) மஞ்சள் கூடுதலாக சேர்க்கவும்.

க்ரீன் ஸ்மூதி

உட்கொள்ளும் முறை: 2

மூலப்பொருட்கள்:

  • 1 வாழைப்பழம், தோலுரித்து நறுக்கியது
  • 1-இன்ச் நீளமுள்ள புதிதான இஞ்சி, தோலுரித்தது
  • 2 கைப்பிடி புதிதான பேபி ஸ்பினாச் / பசலைக் கீரை
  • 1 கப் புதிதான (அண்ணாசி பழ/பைனாப்பிள்) சங்க்ஸ்
  • 1/2 கப் தேங்காய் நீர்
  • 1/2 கப் பாதாம் பால் (அல்லது சாதாரண கிரீக் தயிர்)
  • 1 டீ-ஸ்பூன்/தேக்கரண்டி சியா விதைகள்

குறிப்புகள்:

  1. எல்லா சேர்வைகளையும் ப்ளெண்டரில் சேர்க்கவும். மிருதுவாகும் வரை கலக்கவும்.

சூடான புத்துயிரூட்டும் பானங்கள்

மஞ்சள்-இஞ்சி டீ

உட்கொள்ளும் முறை: 5

மூலப்பொருட்கள்:

  • 5 கப் தண்ணீர்
  • 1 எலுமிச்சையின் மஞ்சள் தோல் - காய்கறி பீலர் பயன்படுத்தவும்
  • 2-இன்ச் நீளமுள்ள இஞ்சி - மெலிதான வட்டங்களாக அல்லது துருவியது, தோலுடன்
  • 2-இன்ச் நீளமுள்ள மஞ்சள் விழுது - மெலிதான வட்டங்களாக அல்லது துருவியது, தோலுடன்
  • 1 கருப்பு மிளகு - உடைத்தது
  • ஒரு எலுமிச்சையின் சாறு
  • 1 டீ-ஸ்பூன்/தேக்கரண்டி இயற்கை/உருக்கு தேங்காய் எண்ணெய், வெண்ணை அல்லது வெண்ணைப் பழம்/அவககேடோ எண்ணெய்
  • 1 டீ-ஸ்பூன்/தேக்கரண்டி தேன் (பச்சையானது விரும்பத்தக்கது)

குறிப்புகள்:

  1. தண்ணீர், எலுமிச்சை தோல், இஞ்சி, மஞ்சள், மற்றும் கருப்பு மிளகு - இவற்றை "சிம்" - ல் கொண்டு வந்து, சூட்டை குறைத்து, 7 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
  2. சூட்டிலிருந்து இறக்கி வைத்து, எலுமிச்சை சாறு பிழிந்து, தேங்காய் எண்ணெய் கலக்கவும். டீயை ஒரு கப்-பில் வடிகட்டி, ஒரு டீ-ஸ்பூன்/தேக்கரண்டி தேன் சேர்க்கவும். பச்சை தேன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதன் ஊட்டச் சத்துக்கள் கெடாமல் இருக்க, டீ சிறிது நேரம் ஆறும் வரை காக்கவும். பின், சுவைத்து மகிழவும்!

லெமன்-ஜிஞ்சர் டீ / எலுமிச்சை-இஞ்சி டீ

உட்கொள்ளும் முறை: 2

மூலப்பொருட்கள்:

  • 1-இன்ச் நீளமுள்ள புதிதான இஞ்சி (உரிக்கத் தேவையில்லை)
  • 1 கப் தண்ணீர்
  • 1 (டேபிள் ஸ்பூண் / மேசைக் கரண்டி) எலுமிச்சை சாறு (இப்போது பிழிந்தது)
  • 1 (டேபிள் ஸ்பூண் / மேசைக் கரண்டி) தேன்

குறிப்புகள்:

  1. தண்ணீரை கொதிக்க வைத்து, சூட்டிலிருந்து இறக்கி வைக்கவும்.
  2. எலுமிச்சம் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். இஞ்சியை கையினால் இயக்கப்படும் க்ரேட்டர் மூலம் துருவிக் கொள்ளவும். சுடு தண்ணீரில் சேர்க்கவும்.
  3. 5-10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  4. வடிகட்டிய பின் டீயை ஒரு குவளையில் / மக்கில் ஊற்றவும்.
  5. தேனை சேர்த்து கலக்கவும். பரிமாற தயார்!

எல்டர்பெர்ரி தேனீர் / டீ

உட்கொள்ளும் முறை: 2

மூலப்பொருட்கள்:

  • 2 கப் தண்ணீர்
  • 2 டீஸ்பூன்/தேக்கரண்டி காய்ந்த எல்டர்பெர்ரிகள்
  • 2 டீஸ்பூன்/தேக்கரண்டி பச்சை தேன் (தேவை இருந்தால்)

குறிப்புகள்:

  1. நீள கைப்பிடி உள்ள ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரில் எல்டர்பெர்ரிகளைய போடவும்.
  2. கொதிக்கும் நிலை வந்தபின், சூட்டைக் குறைத்து, "சிம்" - ல் 15 நிமிடங்கள் வைக்கவும் இது எல்டர்பெர்ரியின் பலன் தரும் தன்மைகளை வெளிக்கொணரும்.
  3. சூட்டிலிருந்து இறக்கி வைத்து, 5 நிமிடங்கள் ஆற விடவும்
  4. இறுதியாக, ஒரு மெல்லிய (அரிப்பில்/வடிகட்டியில்) வடிகட்டிய பிறகு, தனித்தனி குவளைகளில்/மக்குகளில் ஊற்றவும்
  5. பச்சைத் தேனில் கலக்கவும்.

More Articles

குறிப்பிட்ட இடைவெளியில் விரதமிருப்பது – சரியான முறையைப் பின்பற்றுங்கள்

வாசிக்க

ப்ராணாயாமா -அடிப்படை உயிர் சக்தி மீது கட்டுப்பாடு எடுத்துவருதல்

வாசிக்க

(யோகா vs ஜிம்) / (யோகாவும் "ஜிம்" மும்)

வாசிக்க

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி

வாசிக்க

விற்பனை நிலையம்

ஈஷா ஷாப்பி

சத்குரு "ஆப்"பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

© 2022, Isha Foundation, Inc.
விதிமுறைகள் & நிபந்தனைகள் |
தனியுரிமைக் கொள்கை. | Powered by Fastly