ஈஷா யோகா வகுப்பில் உலகெங்கிலும் இலட்சக்கணக்கான தியான அன்பர்கள் அர்ப்பணிப்புடன் பயிற்சி செய்யும், மிகவும் தொன்மையான ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா பயிற்சியை நேரடியாகக் கற்றுக்கொள்ளலாம். இந்தக் க்ரியாவைத் தொடர்ந்து செய்வதன் மூலம், மூளையின் செயல்பாடு, தூக்கமுறை, மனநிலையில் ஆரோக்கியம் மற்றும் உடலளவிலான நன்மை ஆகியவற்றில் ஏற்படும் பலன்களை விஞ்ஞானரீதியான ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.
மன அழுத்தம் பிரச்சினை இருந்த பங்கேற்பாளர்களுக்கு , மன அழுத்தம் 50% வரைக் குறைந்துள்ளது
கார்ப்பரேட் நிகழ்ச்சியின் ஆராய்ச்சி பங்குதாரர்
ஈஷா யோகா ஆன்லைன் ஒருவரின் சக்திநிலை, ஆனந்தம், மனநிறைவு மற்றும் பணியில் ஈடுபாடு ஆகியவற்றில் குறிப்பிடத்தகுந்த மேம்பாட்டினை கொண்டு வந்துள்ளது
கார்ப்பரேட் நிகழ்ச்சியின் ஆராய்ச்சி பங்குதாரர்
ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்பவர்களிடம் செய்த ஒரு ஆய்வின் படி, ஒரு வருட காலப் பயிற்சியில், மனம் மற்றும் உணர்வுரீதியாக குறிப்பிடத்தக்க பலன்களை அடைந்துள்ளனர் எனக் கண்டறியப்பட்டது. இந்தப் பயிற்சி செய்வதற்காக, வாழ்க்கை முறையில் எவ்வித மாற்றமும் கொண்டுவரத் தேவையில்லாத போதும், இந்தப் பயிற்சி மூலம், அவர்கள் அதிக அளவு கவனிக்கும் திறன், ஆனந்தம், சந்தோஷம் மற்றும் உள்நிலையில் அமைதியும் அடைந்துள்ளனர்.
A study conducted on 536 Shambhavi practitioners showed improvement in the following areas:
ஒரு ஆய்வில் ஷாம்பவி பயிற்சி செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஷாம்பவி செய்பவர்களிடம் ஓய்வு நிலையில் உள்ள மூளை வடிவங்கள் மிகவும் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. பொதுவாக மிக ஆழமான தூக்க நிலைகளில் ஏற்படும் தரமான ஓய்வு, தளர்வு நிலை மற்றும் மறு உருவாக்க செயல் ஆகியவற்றை ஷாம்பவி வழங்குவதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி செய்த ஆய்வில், ஷாம்பவி செய்யும் 536 பேர்கள், நாட்பட்ட நோய்களான தலைவலி, ஒற்றைத்தலைவலி, ஒவ்வாமை, ஆஸ்துமா, முதுகு வலி, மாதவிடாய்க் கோளாறுகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். தூக்கமின்மை (insomnia) உள்ளவர்களிடம், குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் இருப்பதையும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நோயாளிகளில் 40% பேர் மருந்து எடுத்துக்கொள்வதைக் குறைத்துள்ளனர் அல்லது முற்றிலுமாகவும் நிறுத்தியுள்ளனர்.
தினசரிப் பயிற்சியால் முன்னேற்றமடைந்துள்ள தனிநபர்களின் சதவிகிதம்
75% பெண்களுக்கு மாதவிடாயில் பிரச்சனைகள் இருப்பதாக கருதப்படுகிறது. Poole Hospitals NHS Trust, UK, and the Indiana University School of Medicine- இந்த நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு குழு, ஷாம்பவி செய்யும் 128 பெண்களிடம், ஷாம்பவி பயிற்சி கற்றுக்கொள்வதற்கு முன்னும், பயிற்சிசெய்ய ஆரம்பித்து ஆறு மாதங்களுக்குப் பின்னும், மாதவிடாய் கோளாறுகள் இருப்பதைப் பற்றி ஒரு கேள்வித்தாள் கணக்கெடுப்பு எடுத்தனர்.
Maturi R et al. Survey of wellbeing in Isha Yoga practitioner. March 2010
Muralikrishnan K, Balakrishnan B, Balasubramanian K, Visnegarawla F. Measurement of the effect of Isha Yoga on cardiac autonomic nervous system using short-term heart rate variability. J Ayurveda Integr Med. April 2012.
Santhosh J, Agrawal G, Bhatia M, Nandeeshwara SB, Anand S. Spatio-Temporal EEG Spectral Analysis of Shambhavi Maha Mudra Practice in Isha Yoga.
Vinchurkar S, Telles S, Visweswaraiah NK. Impact of Long Term Meditation Practice on Sleep: A Matched Controlled Trial. International Symposium on YOGism. Dec.2010.
Needhirajan TP, Maturi R, Balakrishnan B. Effect of Isha Yoga on Menstrual Disorders.
© 2022, Isha Foundation, Inc.
விதிமுறைகள் & நிபந்தனைகள் |
தனியுரிமைக் கொள்கை. | Powered by Fastly