உங்களுக்கு விருப்பமான நேரத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே சத்குருவுடனான ஈஷா யோகா வகுப்பை ஆன்லைனில் அனுபவபூர்வமாக உணருங்கள். ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பில், ஏழு பாகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாகமும் 90 நிமிடங்கள் கொண்டது. இந்த வகுப்பில் பாரம்பரியமான யோக விஞ்ஞானத்தின் சக்தி வாய்ந்த கருவிகள் உங்களுக்கு வழங்கப்படும். இந்த கருவிகள் மூலம், நீங்கள் வாழும் விதம், வாழ்வை உணரும் தன்மை மற்றும் வாழ்க்கையின் அனுபவத்தையே மாற்றியமைக்க முடியும்.
வாழ்க்கையை எளிதாக வாழ்ந்திட உதவும் நடைமுறைக்கு ஏதுவான கருவிகள்
வாழ்வின் முக்கிய அம்சங்களை கையாள்வதற்கான தியானங்கள்
புத்துணர்வும் சமநிலையும் தரும் யோக பயிற்சிகள்
விழிப்புணர்வுக்கான கருவிகள்
தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவு
வாழ்நாள் முழுவதும் கேள்வி பதில் வீடியோக்களின் பொக்கிஷ தொகுதியை காணும் வாய்ப்பு
“இந்த உலகிலேயே மகத்தான எந்திரம் மனித உடல்தான். ஆனால் இதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதை நீங்கள் படிக்கவில்லை. அதை நாம் பார்க்கலாம்.” —Sadhguru
“உங்கள் ஆசையைக் கட்டவிழ்த்து விடுங்கள்; எல்லைகளுக்குள் அதைக் கட்டி வைக்காதீர்கள். ஆசையின் எல்லையற்ற தன்மையில்தான் உங்களுடைய உச்சபட்ச தன்மையும் இருக்கிறது.” —Sadhguru
“நீங்கள் எனும் தன்மை தடையில்லாமல் விரிவடைந்தால்தான் உயிர்த்தன்மை உங்களை முழுமையாய் வாழ அனுமதிக்கும். முழுமையாய் வாழும் நிறைவு ஒன்றை மட்டும்தான் உங்கள் உயிர் உணரும்.” —Sadhguru
“உங்கள் வாழ்வின் ஒவ்வொரு க்ஷணத்தையும் முழு விருப்பத்துடன் நடத்தும் போது, அதை சொர்க்கமாக ஆக்கிக் கொள்வீர்கள். விருப்பமில்லாமல் நீங்கள் செய்யும் அனைத்தும் நிச்சயமாக நரகம் தான்.” —Sadhguru
“Most people are trying to control their minds. I want you to liberate your mind to its fullest possibility.” —Sadhguru
“வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் உங்கள் உடல், மனம், உணர்வு, சக்தி நிலைகளில் ஏதோவொன்றை செய்து கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒருவித நினைவை உங்களுக்குள் ஏற்படுத்துகிறது. இதைத்தான் கர்மா என்கிறோம். ” —Sadhguru
“உங்கள் சுகமும், சுகவீனமும், ஆனந்தமும், துக்கமும் உங்களுக்குள் இருந்துதான் வருகிறது. உங்களுக்கு நல்வாழ்வு வேண்டுமெனில், நீங்கள் உள்நிலையை நோக்கித் திரும்ப வேண்டும்.” —Sadhguru
© 2022, Isha Foundation, Inc.
விதிமுறைகள் & நிபந்தனைகள் |
தனியுரிமைக் கொள்கை. | Powered by Fastly